Daily Cosmic Resonanceதினசரி ஆன்மீக அதிர்வுகள்

Sivapuranam Chanting சிவபுராணம் பாராயணம்

Join the daily live chanting at 6:00 PM and contribute to our global 1 Lakh daily target. தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் நேரடி பாராயணத்தில் இணைந்து, 1 லட்சம் தினசரி இலக்கை அடைய உதவுங்கள்.

Today's Global Goalஇன்றைய உலகளாவிய இலக்கு

1,00,000 Chants1 லட்சம் பாராயணம்

Live Devoteesநேரடிப் பக்தர்கள்

127

Completed Todayஇன்று முடிந்தது

64

0.06%
Live at 6:00 PM ISTமாலை 6:00 மணி நேரலை

Mass Sivapuranam Chantingகூட்டு சிவபுராணம் பாராயணம்

The live session auto-syncs. It is designed for everyone to recite together simultaneously. இந்த ஆடியோ நேரலையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் பாராயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Update Your Recitation Count உங்கள் பாராயண எண்ணிக்கையைச் சேர்க்கவும்

Add your count to today's global 1 Lakh target. இன்றைய 1 லட்சம் இலக்கில் உங்கள் எண்ணிக்கையையும் இணையுங்கள்.

Sacred Lyricsபுனித வரிகள்

தமிழ் சிவபுராணம் வரிகள்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம் ...
English Sivapuranam Lyrics
Namasivaya vaazhga, Nadan thal vazzhga,
Imai podum yennenjil neengaadhan thal vazhga.
Kokazhi aanda guru mani than thaal vaazhga,
Agamam aagi nindru annippan vaazhga,

Yekan anegan iraivan adi Vaazhga
Vegam keduthu aanda vendan adi velga,
Pirapparukkump injakan than pey kazhalgal velga,
Puratharkkum cheyon than poomkazhalgal velga,

Karam kuvivaar ul magizhum kon kazhalgal velga,
Siram kuvivaar onguvikkum cheeron kazhal velga.
Eesan adi Potri, Yenthai adi Potri,
Nesanadi Potri, Sivan Sevadi Potri,

Neyathey nindra nimalan adi Potri,
Maya pirappu arukkum mannan adi Potri,
Cheeraar perum thurai nama devan adi Potri
Aaratha inbam arulum malai Potri,

Sivan avan yen sinthayul ninra athanaal,
Avan arulaale avan thal vanagi,
Chinthai magizha Siva puranam thanai,
Munthai vinai muzhuthum oya uraippan naan.

Kan nuthalaan than karunai kan kaatta vandeythi,
Yennutharkettaa vezhilaar kazhal irainji,
Vin nirainthum, man niranthum mikkai vilakku oiliyaai,
Yenn iranthu yellai illathaane nin perum cheer,

Pollaa vinayen pugazhum maru ondru ariyen.
Pullagi, poodai puzhuvai maramaki,
Pal virugamagi pravayai, pambaki,
Kallai, manitharai peyai, ganangalai,

Val asuraragi, munivaraai, devaraai,
Chellaaa nindra, ithathavara jangamathukkul,
Yella pirappum piranthu, ilaithen, yem perumaane.
Meyye Un ponnadikal kandu indru veedu uthen,

Uyya yen ullathul ongaramai nindra,
Meyya, vimala, vidaipaka, vedangal,
Iyya yena vongi aazhndu agandra nunniyane
Veyyayai, thaniyaai, iyamaananaam vimalaa,

Poi aayin yellam poi akala vandharuli,
Mei jnanam aagi milirgindra mei chudare,
Yejjanam illathen inba perumale,
Agjnan thannai agalvikkum nal arrive.

Aakkam alavu iruthi illai, anaithulagum,
Aakkuvaai, kaapaai, azhippai, arul tharuvai,
Pokkuvai, yennai puguvippai nin thozhumpin,
Naathathin neriyai cheyai, naniyaane,

Matham manam kazhiya nindra marayone .
Karantha paal kannalodu nei kalanthor pol,
Chiranthu adiyar chinthanayul then oori nindru,
Pirantha pirappu arukkm yengal peruman,

Nirangal or iynthu udayai, vinnorgal yetha,
Marainthu irunthai yen peruman,valvinai yen thannai,
Marainthida moodiya irulai,
Arambhavam yenum arum kayithaal katti,

Puram thol porthu, yengum puzhu azhukku moodi,
Malam chorum onpathu vayil kudilai,
Malanga pulangal iynthum vanchanayai cheyya
Vilangum manathal, Vimalaa unakku,

Kalantha anbaagi, kasinthu ul urugum,
Nalam than ilatha siriyerkku nalgi,
Nilam than mel vanthu aruli, neel kazhalkal kaatti,
Nayir kidayai kidantha adiyerkku,

Thayir chirantha dhayavana, thatthuvane
Masatha jyothi malarntha malar chudare,
Desane, theanar amudhe, Shivapurane,
Pasamaam patthu aruthu parikkum aariyane,

Nesa arul purinthu nenjil vanjam keda,
Peraathu nindra perum karunai peraare.
AAraa amudhe, alavilaa pemmane,
Oraathaar ullathu olikkum oiyaane,

Neerai urukki yen aaruyirai nindraane,
Inbavum thunbavum illanne, ullane.
Anbarukku anbane, Yavayumai, allaiyumai,
Chothiyane thunnirule, thondra perumayane,

Aadhiyane antham naduvagi allane,
Eerthu yennai aat konda yenthai perumane,
Koortha mey jnanthaal kondu unarvar tham karuthin,
Nokkariya nokke, nunukku ariya nun unarve.

Pokkum varavum punarvum illa punniyane,
Kakkum yen kavalane, kanbariya peroliye,
Aathru inba vellame, Atha mikkai nindra,
Thotha chuddar oliyai chollatha nun unarvai.

Maathamaam vaiyakathin, vevvere vandhu arivaam,
THethane, thetha thelive, yen chindanai ul,
OOthaana unnar amudhe, udayaane,
Vethru vikara vidakku udambin ul kidappa,

AAthen yem ayya arane oh yendru yendru.
Potri pugahndhirundu poi kettu mei aanaar
Meet ingu vandhu vinai piravi Chaaraame,
Kalla pula kkurambai kettu azhikka vallane,

Nal iruil nattam payindru aadum nadhane,
Thillai ul koothane, then pandi naattane.
Allal piravi aruppavane oh endru,
Chollarkku ariyanai cholli thiruvadi keezh,

Cholliya paatin chol unarnthu cholluvaar,
Chelvaa shiva purathin ullar, Sivan adi keezh,
Pallorum yetha panithu.

Tiruchittrambalam ...

Devotees' Experienceபக்தர்களின் அனுபவங்கள்

Share your thoughtsஉங்கள் அனுபவத்தைப் பகிரவும்

Chandra Sekaran M
47 mins ago

Om Namashivaya 🙏🙏🙏

Chandrasekar Shankar
1 hour ago

Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya 🙏🙏 Peace of Mind ✴️✴️

Santhi
2 hours ago

Om Namasivaya

GOWRI Ravichandran
2 hours ago

ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏

மீனா சோமசுந்தரம்
2 hours ago

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

View All Experiencesஅனைத்து அனுபவங்களையும் பார்க்க