உலவாக் கோட்டை அருளிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் உலவாக் கோட்டை அருளிய படலம் முப்பத்தி எட்டாவது படலமாகும்.

மதுரையில் அடியார்க்கு நல்லான் என்னும் வேளாளன் ஒருவன் இருந்தான். அடியவர்களுக்கு தொண்டு செய்வதே அறமாகக் கொண்டதால் அடியார்க்கு நல்லான் என்று பெயர் பெற்றான். அவனுடைய மனைவி தரும சீலை. இப்பெண்மணியும் அறவழியில் நடந்து கணவன் அறவழியில் செல்வதற்கு உதவினாள். தினமும் அடியவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிட்ட பின்பே இருவரும் உணவருந்துவார்கள். அடியார்க்கு நல்லான் தன்னுடைய வேளாண்மையில் விளைந்த பொருட்களில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு வரி செலுத்தி மீதி உள்ளதை சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தல் என்னும் சிறப்பான சேவையை செய்து வந்தான். தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் அடியார்களுக்கு திருவமுது செய்விக்க பயன்படுத்தினான். இதனால் நாளடைவில் அடியார்க்கு நல்லானிடம் திருவமுது உண்ணும் சிவனடியார்களின் கூட்டம் பெருகியது. இந்நிலையில் இறைவனார் அடியார்க்கு நல்லான் தன்னுடைய செல்வம் குறைந்த போதிலும் சிவனடியார்க்கு செய்யும் திருவமுது செய்வித்தலை குறையாக‌க் கொள்ளமாட்டான் என்ற உயர்ந்த பண்பினை உலகுக்கு உணர்த்த விரும்பினார். நாளடைவில் அடியார்க்கு நல்லானின் விளைநிலங்களில் விளைச்சல் குறையத் தொடங்கியது. இதனால் அவனிடம் இருந்த செல்வவளம் குன்றியது. எனினும் அடியார்க்கு நல்லான் பிறரிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்தான். ஒரு கட்டத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அடியார்க்கு நல்லானுக்கு யாரும் கடன் தரவில்லை. அடியார்க்கு நல்லானும் தரும சீலையும் வறுமையால் சிவனடியார்களுக்கு திருவமுது செய்யவும் இயலாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தனர். இறுதியில் அடியார்க்கு நல்லான் தன்னுடைய மனைவியான தரும சீலையுடன் சொக்கநாதரின் சந்நிதிக்குச் சென்றான். அப்பனே என்னுடைய விளைநிலங்களில் விளைச்சல் இல்லை. எனவே பிறரிடம் கடன்வாங்கி அடியார்களுக்கு திருவமுது செய்வித்தேன். இப்போது எனக்கு கடன் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. தயவு செய்து கடன் தருபவர்கள் யாரவது இருந்தால் அவரை எனக்கு காட்டுங்கள். அவரிடம் கடன் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்விப்பேன். இல்லையேல் எங்களுடைய உயிரினை விட்டுவிடுவோம் என்று மனமுருகி வழிபட்டான்.

அடியார்க்கு நல்லானின் வழிபாட்டினைத் தொடர்ந்து வானில் இறைவனார் வேளாளனே பயப்பட வேண்டாம். உன் வீட்டில் நெல் உள்ள ஒரு உலவாக்கோட்டை (உலவாக்கோட்டை என்பது 24 மரக்கால் அளவு கொண்ட கொள்கலன் ஆகும். 1 மரக்கால் என்பது 4 படி ஆகும். ) ஒன்றைச் வைத்துள்ளோம். அதிலிருந்து நெல்லை எப்பொழுது எவ்வளவு எடுத்தாலும் அள்ள அள்ளக் குறையாது. அதனைக் கொண்டு அடியவர்களுக்கு திருவமுது செய்விக்கும் தொண்டினையும் பிற தருமங்களையும் செய்து வருவாயாக. இறுதியில் யாம் வீடுபேற்றினை அளிக்கின்றோம் என்று திருவாக்கு அருளினார். அதனைக் கேட்ட அடியார்க்கு நல்லான் மகிழ்ந்து இறைவனாரை பலவாறு துதித்து வழிபாடு மேற்கொண்டு தன்னுடைய மனைவியுடன் தன்வீடு திருப்பினான். அங்கு இறைவனாரின் அருட்கொடையினால் அரிசிக் கோட்டையைக் கண்டான். நாள்தோறும் தன் மனைவியுடன் அதனை முறைப்படி வழிபட்டு அதிலிருந்து உணவுக்குத் தேவையானவற்றைப் பெற்று அடியார்களுக்கு திருவமுது செய்துவித்து நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். இறுதியில் இறையருளால் வீடுபேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தானத்தில் சிறந்தது அன்னதானம். அதனை எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் சிவனுக்கே செய்யும் தொண்டாக எண்ணி செய்தால் இறைவன் அவர்களின் செயலுக்கு துணை நிற்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

 

Ulavaakkottai Aruliya Padalam (உலவாக்கோட்டை அருளிய படலம்)

"Ulavaakkottai Aruliya Padalam" is the 38th chapter in the Thiruvilaiyadal Puranam.

 

This chapter translates to "The Chapter where the Inexhaustible Granary was Granted." It is a beautiful story that highlights the supreme virtue of Annadhanam (the offering of food) and shows that God will provide infinite resources to a devotee whose only goal is to serve others.

 

(Note: This is different from the "Ulavaakkizhi" chapter, where an inexhaustible purse of gold was given to a King. Here, an inexhaustible measure of grain is given to a humble farmer.)

 

The Story

1. The Pious Farmer

In the city of Madurai, there lived a humble and devout farmer (Vellalar). His primary dharma and greatest joy in life was feeding the devotees of Lord Shiva. Because of his selfless service, he earned the name Adiyarku Nallan (meaning "He who is good to the devotees"). His wife, Dharma Seelai, was equally devoted and supported him wholeheartedly.

 

The couple had a strict vow: every day, they would invite wandering Shaivite saints and devotees to their home, serve them a grand feast, and only eat whatever was left over.

 

2. The Divine Test

To demonstrate the unbreakable faith of Adiyarku Nallan to the world, Lord Somasundarar (Shiva) decided to test him. Suddenly, the farmer's agricultural lands stopped yielding crops. A severe drought struck his fields, and his vast wealth quickly dried up.

 

Despite his sudden poverty, Adiyarku Nallan refused to stop feeding the devotees. He began borrowing money and grains from wealthy merchants in Madurai just to continue his daily Annadhanam.

 

3. The Breaking Point

As the drought continued, his debts piled up enormously. Eventually, a day came when no one in the city was willing to lend him even a single handful of grain. Unable to bear the thought of turning hungry devotees away from his door, the farmer lost all hope.

 

4. The Surrender at the Temple

Heartbroken, Adiyarku Nallan and his wife Dharma Seelai went to the Meenakshi Sundareswarar Temple. Standing before the sanctum, he wept bitterly and prayed: "Oh Lord Sokkanatha! My lands are barren, and no one will lend me money. I cannot live a life where I turn away hungry devotees. Please show me someone who will lend me grain, or I shall end my life right here at Your feet!"

 

5. The Gift of the Ulavaakkottai

Pleased by his pure, selfless devotion, Lord Shiva's divine voice (Asariri) echoed through the temple: "My dear devotee, do not fear! Return to your home. I have placed an 'Ulavaakkottai' there for you. Use it to feed my devotees, and you shall lack nothing."

 

(A 'Kottai' is a traditional Tamil agricultural measure/sack equivalent to 24 Marakkals, and 'Ulavaa' means inexhaustible or never-diminishing).

 

6. The Inexhaustible Harvest

Overjoyed, the couple rushed back to their humble home. There, they found a beautiful, divine vessel filled to the brim with high-quality paddy.

 

A miracle occurred every single day from then on. No matter how many sacks of grain Adiyarku Nallan scooped out of the Ulavaakkottai, the vessel instantly refilled itself. It never went empty. Using this divine, infinite supply of food, the couple fed thousands of devotees for the rest of their lives and ultimately attained Moksha (liberation).

 

Significance and Legacy

  • The Supremacy of Annadhanam: This chapter establishes that feeding the hungry is one of the highest forms of worship. God tested the farmer not to break him, but to prove that true charity does not stop when one's own bank account runs dry.

  • The Lord as the Ultimate Provider: Unlike other stories where Kings use royal treasuries, this story shows God directly intervening in the domestic life of a common agricultural worker to ensure his charitable works continue.

Reader Comments

No comments yet. Be the first to share your thoughts!