அநாத்மஸ்ரீ விகர்ஹணம்

1

லப்தா வித்யா ராஜமன்யா தத:கிம்
பராப்தா ஸம்பத்ப்ராப வாட்யாதத:கிம்
புக்தா நாரீ ஸுந்தராங்கீ தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: அரசாங்கப் போற்றுதலுக்கேற்ற கல்வி பெற்றிருந்து என்ன பயன், ஆளுமையுடன் செல்வம் பெற்றிருந்துதான் என்ன பயன்?அழகிய ஆரணங்கு தன் வயப்பட்டிருந்தும் பயன் என்ன? ஒருவன் ஆத்மானுபவம் பெற்றிருக்கவில்லையெனில் ?

2

கேயூராத்யைர்பூஷிதோ வா தத:கிம்
கௌசே யாத்யை ராவ்ருதோவோ தத:கிம்
த்ருப்தோ ம்ருஷ்டான்னாதினா வா தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷத்க்ருதோsபூத்

பொருள்: தோள்வளை போன்ற அணிகள் அணிந்திருந்தும் பயன் என்ன? நல்ல வெண்பட்டு உடுத்தியிருந்தும் தான் என்ன பயன்? பிசைந்த நறுமண அன்னம் புசித்து திருப்திபட்டிருந்தாலும் பயன் என்ன? ஒருவன் ஆத்மஞானம் பெற்றிருக்கவில்லையெனில்?

3

த்ருஷ்டா நாநா சாருதேசாஸ்தத:கிம்
புஷ்டாஸ்சேஷ்டா பந்துவர்காஸ்தத:கிம்
நஷ்டம் தாரித்ர்யாதி து:கம் தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: எவனொருவன் ஸ்வாத்மானுபவம் பெற்றிருக்கவில்லையோ அவன் அழகிய பல நாடு நகரங்களைப் பார்த்து வந்திருந்தும் பயனில்லை. அன்பிற்குரிய உற்றார் உறவினைப் பேனி காத்திருந்தும் பயனில்லை. ஏழ்மை நீங்கி துன்பமே நெருங்காவண்ணருந்தும் பயனில்லையே ?

4

ஸ்நாத: தீர்த்தே ஜஹ்முஜாதௌ தத:கிம்
தாநம் தத்தம் த்வ்யஷ்டஸங்க்யம் தத:கிம்
ஜப்தா மந்த்ரா: கோடிசோ வா தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: எவனொருவன் ஆத்மானந்தானுபவம் பெறவே இல்லையோ அவன் கங்கை முதலிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்திருந்தும் பயனில்லை. பதினாறு வித தானங்கள் செய்திருந்தும் பயனில்லை. கோடிக்கணக்கில் மந்திர ஜபம் செய்திருந்தும் பயனில்லை

5

கோத்ரம் ஸம்யக்பூஷிதம் வா தத:கிம்
காத்ரம் பஸ்மாச்சாதிதம் வா தத:கிம்
ருத்ராக்ஷ£தி: ஸந்த்ருதோ வா தத:கிம்
யே நஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: ஒருவன் ஸ்வாத்மானுபவம் பெற்றிருக்கவில்லையெனில் அவன் தனது வம்சத்தை முன்னேறச் செய்திருந்தும், உடம்பில் விபூதிப் பட்டைகள் தீட்டியிருந்தும், ருத்ராஷம் முதலியவை தரித்திருந்தும் பயனில்லையே!

6

அந்நைர் விப்ராஸ்தர்பிதா வா தத:கிம்
ஜ்ஞைர்தேவாஸ் தோஷிதா வா தத:கிம்
கீர்த்யா வ்யாப்தா:ஸர்வலோகாஸ்தத:கிம்
யேந ஸ்வாதமா நைவ ஸாக்ஷ£த்க்ரிதோsபூத்

பொருள்: அன்னம் முதலியவற்றால் நல் பிராமணர்களை திருப்தியடை வித்திருந்தும் பயனில்லை; யாகம் முதவியவற்றால் தேவர்களை மகிழ்ச்சியடைச் செய்திருந்தும் பயனில்லை; எங்கும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்தும் பயனில்லை. ஒருவன் ஆத்மானுபவம் பெறவில்லையெனில்

7

காய:க்லிஷடஸ் சோப வாஸைத்தத: கிம்
லப்தா:புத்ரா:ஸ்யபத்ன்யாஸ்தத:கிம்
ப்ராணாயாம:ஸாதிதோ வா தத: கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த் க்ருதோsபூத்

பொருள்: உபவாஸருந்து காயகிலேசம் அடைந்தும் பலனில்லை. தனது மனைவியிடமே பிள்ளைகள் பெற்றிருந்தும் பயனில்லை. ப்ராணாயாமம் செய்து சாதனை புரிந்திருந்தும் பயன் இல்லை. ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெறாவிடில்

8

யுத்தே சத்ருர் நிர்ஜிதோ வா தத:கிம்
பூயோ த்ரை: பூரிதோ வா தத:கிம்
யோகை:ப்ராப்தா:ஸித்தயோ வா தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: யுத்தத்தில் பகைவரை வென்றிருந்தும் பயனில்லை; மறுபடியும் உற்ற நண்பர்கள் புடைசூழ இருந்தும் பயனில்லை; யோக சாதனையால் பற்பல சித்திகளைப் பெற்றிருந்தும் பயனில்லை. ஒருவன் ஆத்மாஸாக்ஷ£த்காரம் அடைந்திராவிடில்

9

அப்தி:பத்ப்யாம் லங்கிதோ வா தத:கிம்
வாயு:கும்பே ஸ்தாபிதோ வா தத:கிம்
மேரு:பாணௌ உத்ருதோ வா தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெற்றிராவிடில் சமுத்ரத்தை காலால் தாண்டித்தான் என்ன பயன்? காற்றை குடத்தில் அடைத்துதான் என்ன பயன்? மஹாமேரு மலையை கையில் தூக்கிப்பிடித்துதான் பயன் என்ன?

10

க்ஷ்வேல:பீதோ துக்தவத்வா தத:கிம்
வஹ்நிர்ஜக்தோ லாஜவத்மா தத: கிம்
ப்ரப்தஸ்சார:பக்ஷிவத் கே தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த் க்ருதோsபூத்

பொருள்: ஒருவன் ஆத்ம ஸாக்ஷ£த்காரம் செய்திராவிடில், அவன் விஷயத்தை பால்போல் குடித்தும் பயனில்லை; பொரி போல் தீயை முழுங்கியும் பயனில்லை; பறவை போல் வானில் பறக்கும் சக்திபெற்றிருந்தும் பயனில்லை

11

பத்தா: ஸம்யக் பாவகாத்யா ஸ்தத: கிம்
ஸாக்ஷ£த் வித்தாலோஹவர்யாஸ்தத:கிம்
லப்தோ நிக்ஷேபோsஞ்ஜநாத்யைதத:கிம்
யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: b முதலியவை கட்டப்பட்டாலும் பயனில்லை; உலோகங்களை கையால் துண்டு துண்டாக முறித்திருந்தாலும் பயனில்லை; மை முதலியவற்றைக் கொண்டு புதையலைக் கண்டுபிடித்திருந்தாலும் பயனில்லை - ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெற்றிராவிட்டால்

12

பூபேந்த்ர த்வம் ப்ராப்த முர்வ்யாம் தத:கிம்
தேவேந்த் ரத்வம் ஸம்ப்ருதம் வா தத:கிம்
முண்டூந்த்ரத்வம் சோபலப்தம் தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: ஒருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் பெற்றிராவிடில் அவன் பூலோகத்தில் அரச ஸார்வ பௌமனாக இருந்தும் பயனில்லை. தேவேந்தர பதவியை தேடிப் பெற்றிருந்தும் பயனில்லை; ஸந்நியாஸிகள் தலைவர் என்று பெயர் பெற்றிருந்தும் பயனில்லை

13

மந்த்ரை:ஸர்வ:ஸ்தம்பிதோ வா தத:கிம்
பாணைர்லக்ஷ்யோ பேதிதோ வா தத:கிம்
காலஜ்ஞானம் சாபி லப்தம் தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த் க்ருதோsபூத்

பொருள்: ஒருவன் ஆத்மஸாவரூபத்தை ஸாக்ஷ£த்கரிக்கவில்லையாகில் அவன் மந்த்ரங்களால் எல்லோரையும் அசையமுடியாதபடி செய்து விட்டாலும் கூட பயன் என்ன? அம்புகளால் குறியை பிளந்து எரிந்து விட்டாலும் என்ன பயன? துல்யமான கால அளவை தெரிந்து கொண்டு விட்டால் கூட என்ன பயன்?

14

காமாதங்க:கண்டிதோவா தத:கிம்
கோபாவேச:குண்டிதோ வாதத:கிம்
லோபாச்லேஷோ வர்ஜிதோ வாதத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: ஒருவன் ஆத்மஸ்வரூபத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் கொள்ளவில்லையானால், காமத்தொல்லையை அடியோடு தொலைந்து விட்டாலும், கோபத்தாக்குதலை முடக்கிவிட்டாலும், பேராசையைச் சேராமல் அழித்து விட்டாலும்தான் பயன் ஏதுல்லை

15

மோஹத்வாந்த:பேஷிதோ வா தத:கிம்
ஜாதோ பூமௌ நிர்மதோ வா தத:கிம்
மாத்ஸர்யார்தி:மீலிதா வா தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவஸாக்ஷ£த்க்ருதோsபூத்

பொருள்: மோஹமாகிய இருள் கசக்கி எறிப்பட்டது என்றாலும், பூலோகத்தில் செருக்கு இல்லாதவனாகிய பிறந்தான் என்றாலும் போட்டித் தொல்லை ஒடுக்கப்பட்டு விட்டது என்றாலும் பயன் என்ன? ஏனெனில் ஆத்மானுபவம் பெறப்படவில்லையே ?

16

தாதுர்லோக:ஸாதிதோ வா தத:கிம்
விஷ்ணோர்லோகோ க்ஷிதேவா தத:கிம்
சம்போர்லோக:சாஸிதோ வா தத:கிம்
யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷ£த்க்ரும்தோsபூத்

பொருள்: எவனொருவன் ஆத்மஸாக்ஷ£த்காரம் செய்யவில்லையோ அவன் பிரம்மலோகத்தை எட்டி பிடித்துவிட்டாலும், விஷ்ணுலோகத்தப் பார்த்து வந்து விட்டாலும், சிவலோத்தை ஆண்டு விட்டாலுமே பயன் ஏதுல்லையே ?

17

யஸ்யேதம் ஹ்ருதயே ஸம்யகநாத்மஸ்ரீ விகர்ஹமம்
ஸதோதேதி ஸ ஏவாத்ம ஸாக்ஷ£த்காரஸ்ய பாஜனம்

பொருள்: இந்த ஆத்மானுபவச் செல்வம் இல்லாதவனைப் பழித்தல் என்ற இவ்விஷயம் எவன் மனதில் நன்றாகத் தோன்றி முன்னேறுகிறதோ அவனே ஆத்ம ஸாக்ஷ£த்காரத்திற்கு பாத்திரமாவான்

18

அன்யே து மாயிக ஜகத்ப்ராந்தி வ்யாமோஹ மோஹிதா :
நதேஷாம் ஜாயதே க்வாபி ஸ்வாத்மஸாக்ஷ£த்க்ருதிர்புவி

பொருள்: மற்றவர் பொய்யான உலக வாழ்க்கையின் மயக்கம் மூண்டவர் ஆவர். அவர்களுக்கு ஆத்ம ஸாக்ஷ£த்காரம் ஒருபொழுதும் உண்டாகாது

அநாத்மஸ்ரீ விகர்ஹணம் முற்றிற்று

The Anatma Sri Vigarhanam is a profound Advaita Vedānta text traditionally attributed to Adi Shankaracharya. It systematically examines and rejects (vigarhaṇam) the Anātman—everything that is not the true Self—including the body, mind, senses, ego, and the transient world. The work teaches that attachment to these impermanent entities is the root cause of ignorance and suffering, while the realization of the eternal Ātman as identical with Brahman leads to true freedom. By harmonizing Jñāna (spiritual wisdom), Ātma-vicāra (Self-inquiry), Viveka (discrimination), and the non-dual philosophy of Advaita Vedānta, the Anātma Śrī Vigarhaṇam guides seekers to transcend false identification, attain unwavering Self-knowledge, and realize the supreme state of Moksha.

Reader Comments

No comments yet. Be the first to share your thoughts!