சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம்

1

நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

பொருள்: நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷணயான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மஹேச்வரனாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபினியான சிவனுக்கு நமஸ்காரம்

2

மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய!!

பொருள்: தேவகங்கைத் தண்ணீர் புஷ்பம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்

3

சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய!!

பொருள்: பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனாயிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டரும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்

4

வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்தர தேவார்சித சேகராய!
சந்த்ரார்கவைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம:சிவாய!!

பொருள்: வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்

5

யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

பொருள்: யக்ஷஸ்வரூபியாவும், ஜடைதரித்தராயும், பிநாகவில்லை கையில் கொண்டவரும், பழமையன தேவரும் திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்

சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம் முற்றிற்று

The Shiva Panchakshara Stotram is a timeless devotional hymn that combines poetic beauty with profound spiritual symbolism. Traditionally attributed to Adi Shankaracharya, it reveals the deep significance of the sacred mantra "Namaḥ Śivāya", showing how each syllable points to the all-pervading presence of Lord Shiva. Through its daily recitation with devotion and understanding, devotees seek purity of heart, divine grace, and the highest goal of union with the Supreme.

Reader Comments

No comments yet. Be the first to share your thoughts!